< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
ஜெயராம் மகள் நடிக்க வருகிறார்

20 May 2022 2:29 PM IST
மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஜெயராமின் மகள் மாளவிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலையாளப்பட உலகில் முன்னணி நடிகராக திகழும் ஜெயராம், தமிழில் 'முறை மாமன்', 'கோகுலம்', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'ஏகன்', 'துப்பாக்கி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார். ஜெயராமின் மனைவி பார்வதியும் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். அவரது மகன் காளிதாஸ், தமிழில் 'மீன் குழம்பும் மண்பானையும்', 'புத்தம் புது காலை ', 'ஒரு பக்க கதை ' ஆகிய படங்களிலும், 'பாவ கதைகள்' எனும் வெப் தொடரிலும் நடித்திருந்தார். பல மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜெயராமின் மகள் மாளவிகாவும் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் மாளவிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.