< Back
சினிமா செய்திகள்
அயலான் படத்தின் விஎப்எக்ஸ் குழுவுடன் கைகோர்த்த ஜெயம் ரவியின் ஜீனி படக்குழு
சினிமா செய்திகள்

'அயலான்' படத்தின் விஎப்எக்ஸ் குழுவுடன் கைகோர்த்த ஜெயம் ரவியின் 'ஜீனி' படக்குழு

தினத்தந்தி
|
20 March 2024 7:11 PM IST

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

சென்னை,

ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை அர்ஜுனன் இயக்குகிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் 25-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அதிக பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். 'ஜீனி' படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 'ஜீனி' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அயலான்' படத்திற்கு விஎப்எக்ஸ் பணிகளை மேற்கொண்ட குழுவுடன் 'ஜீனி' படக்குழு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளியான 'அயலான்' படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் சிறந்த பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் 'ஜீனி' படக்குழு அதே குழுவுடன் கைகோர்த்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்