< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெயம் ரவியின் 30-வது பட அறிவிப்பு வெளியானது...!
|19 Sept 2023 6:21 PM IST
ஜெயம் ரவியின் 30-வது படத்துக்கு ‘பிரதர்' என்று பெயர் வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயம் ரவி 2003-ல் வெளியான 'ஜெயம்' படம் மூலம் கதாநாயனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரது நடிப்பில் வந்த 'பொன்னியின் செல்வன்' படம் நல்ல வசூல் பார்த்தது.
தற்போது 'இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அகமது டைரக்டு செய்துள்ளார். 'சைரன்', 'தனி ஒருவன்' 2-ம் பாகம் உள்ளிட்ட சில படங்களும் கைவசம் உள்ளன.
இந்த நிலையில் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இது ஜெயம் ரவிக்கு 30-வது படம். இந்த படத்துக்கு 'பிரதர்' என்று பெயர் வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி.கணேஷ், சீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கலகலப்பான குடும்ப கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது.