< Back
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் முதல் பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' படத்தின் முதல் பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
30 Jan 2024 1:54 AM IST

'சைரன்' திரைப்படம் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'. குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், 'சைரன்' படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள இந்த பாடைல சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்