< Back
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Jan 2024 10:12 PM IST

ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

சென்னை,

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சைரன்' திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்