< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|7 Jun 2023 8:33 PM IST
ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இதையடுத்து 'இறைவன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'இறைவன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.