< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
|16 Jan 2023 10:11 PM IST
ஜெயம் ரவி நடித்துள்ள 'இறைவன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தற்போது 'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'இறைவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் கார்த்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
'இறைவன்' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 'தனி ஒருவன்' படத்தைத் தொடர்ந்து 'இறைவன்' படத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.