ஜெயம் ரவி நடித்துள்ள 'அகிலன்' படத்தின் டிரைலர் வெளியானது..!
|ஜெயம் ரவி நடித்துள்ள 'அகிலன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'அகிலன்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'அகிலன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.