ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' படத்தின் அப்டேட்..!
|நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
'பூலோகம்' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும் சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் அகிலன் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அகிலன் திரைப்படத்தின் டீசர் நாளை (ஜூன் 10) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அகிலன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.