உரசிய ஐஸ்வர்யா ராய்...! உணர்ச்சிவசப்பட்ட ஜெயம் ரவி...!
|ஐதராபாத் நிகழ்ச்சி மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராய் தன்னுடன் சேர்ந்து நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் பற்றி பேசினார்.
ஐதராபாத்
மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையடுத்து விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பல்வேறு நகரங்களுக்கு சென்று படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள்.
ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் மெழுகுச் சிலை போன்று காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் கை கோர்த்து நடந்து வந்த ஐஸ்வர்யா ராய் தெரியாமல் அவர் மீது உரசி விட்டார். இதையடுத்து சந்தோஷத்தில் ஹய்யா என்று உணர்ச்சிவசப்பட்டார் ஜெயம் ரவி. அதை பார்த்து ஐஸ்வர்யா ராய் சிரித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகிவிட்டது.
ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஐதராபாத் நிகழ்வின் தருணங்களை உள்ளடக்கிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். அதில் ஜெயம் ரவி தான் ஐஸ்வர்யா ராயின் மிகப்பெரிய ரசிகர் என்று ஒப்புக்கொண்டார். நான் பாதி தமிழ், பாதி தெலுங்கு. ஆனால், நான் 100 சதவீதம் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் என அதில் அவர் கூறி உள்ளார்.