< Back
சினிமா செய்திகள்
இரு வேடங்களில் ஜெயம் ரவி
சினிமா செய்திகள்

இரு வேடங்களில் ஜெயம் ரவி

தினத்தந்தி
|
6 Oct 2023 11:23 AM IST
நடிகர்: ஜெயம் ரவி நடிகை: கீர்த்தி சுரேஷ்,  டைரக்ஷன்: ஆண்டனி பாக்யராஜ் இசை: ஜி.வி.பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு : செல்வகுமார் எஸ்.கே.

`சைரன்' என்ற புதிய படத்தில் ஜெயம்ரவி இருவேடங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம் `சைரன்'. இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ஆண்டனி பாக்யராஜ் டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``அதிக பொருட் செலவில் ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன'' என்றார்.

ஜெயம்ரவி தோற்றத்தையும், வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் சோகமான முகத்துடன் மிரட்டலாக காட்சியளிக்கிறார். இதற்கு நேர் எதிராக இளமையும் துள்ளலுமான இன்னொரு கதாபாத்திரத்திலும் அவர் வருகிறார். இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே.

மேலும் செய்திகள்