கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியானது
|ரெட் ஜெயண்ட் மூவிஸ், படத்தின் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னை,
வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி, 24, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யாமேனன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அத்துடன், இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் யோகிபாபு, வினய் ராய், லால் என்கிற எம்.பி. மைக்கில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு "காதலிக்க நேரமில்லை" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.