'ஆடுஜீவிதம்' சர்வதேச அங்கீகாரம் பெறுவது உறுதி - பிரபல பாலிவுட் நடிகை
|பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா 'ஆடுஜீவிதம்' படத்தை பாராட்டியுள்ளார்.
சென்னை,
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார்.
அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியானது.
இப்படம் வெளியாகி ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது இப்படம் ஓடிடியில் உள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா ஆடுஜீவிதம் படம் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'மிக அருமை. பிளஸ்சி தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். மீண்டும் ஒருமுறை பல திறைமைகளை கொண்ட இயக்குனர் என்பதை பிளஸ்சி நிரூபித்திருக்கிறார். பிருத்வி ராஜின் நடிப்பு சிறப்பு. 'ஆடுஜீவிதம்' சர்வதேச அங்கீகாரம் பெறுவது உறுதி, என்றார்.
இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நடித்து உள்ளார்.
இந்தியில் வெளியான சர்கம் என்ற திரைப்படத்தின் மூலம் குறுகிய காலத்தில் பாலிவுட்டில் ஒரு நடிகையாக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் ஜெயப்பிரதா.