'ஜவான்' வசூல் சாதனை - 2நாட்களில் ரூ.240.47 கோடி வசூல் ..!
|இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.
இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன் படி இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.