ஜவான் வென்றானா...தோற்றானா? ரசிகர்களின் கருத்துக்கள் இதோ...!
|ஜவான் படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை,
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து நடித்துள்ளனர்.
மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து படம் இன்று வெளியானது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதிரடி ஆக்ஷன், மாஸ், மிரட்டல், நடிப்பு, காதல் காட்சி என அனைத்தையும் ஷாருக்கானுக்காகவும் ரசிகர்களுக்காகவும் அட்லீ எல்லாத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என ரசிகர்கள் ஜவான் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜவான் திரைப்படம் 4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக்பஸ்டர் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
இன்னும் சில வாரங்களுக்கு தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டம் தான் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இப்போ தான் ஜவான் படத்தை பார்த்து முடித்தேன், ஷாருக்கான் ஏகப்பட்ட கெட்டப்புகளில் தனது மொத்த நடிப்பையும் இந்த ஒரு படத்தில் இறக்கி நடித்து அசத்தி உள்ளார். இன்கிரெடிபிளான அவரது நடிப்பை பார்த்து விட்டு அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை என இந்த ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.