ஹையோடா... எனக்குன்னு வந்த ஜோடியா...! ஷாருக்கான் உடன் காதல் காட்சியில் பிச்சு உதறிய நயன்தாரா
|ஜவான் படத்தின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. ஹையோடா என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடி உள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான 'வந்த எடம்' என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது.
தற்போது ஜவான் படத்தின் அடுத்த பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. ஹையோடா என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை தமிழில் அனிருத் பாடி உள்ளார். இதன் இந்தி பதிப்பை அர்ஜித் சிங் பாடி இருக்கிறார். ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் அசத்தலான காதல் காட்சிகளால் நிரம்பி வழியும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.