< Back
சினிமா செய்திகள்
ஜவான் படத்தின் மூன்றாவது பாடல் நாட் ராமய்யா வஸ்தாவையா வெளியானது..!!
சினிமா செய்திகள்

ஜவான் படத்தின் மூன்றாவது பாடல் 'நாட் ராமய்யா வஸ்தாவையா' வெளியானது..!!

தினத்தந்தி
|
29 Aug 2023 4:44 PM IST

ஜவான் படத்தின் மூன்றாவது பாடலான நாட் ராமய்யா வஸ்தாவையா வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'ஜவான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அனிருத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்நிலையில் 3வது பாடலான 'நாட் ராமையா வஸ்தாவையா' பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்