ரூ.700 கோடி வசூலை நெருங்கிய 'ஜவான்' - படக்குழு அறிவிப்பு
|ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது
மும்பை,
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார். 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து 'ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
Jawan conquering the Box Office like a soldier!
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 15, 2023
Book your tickets now! https://t.co/B5xelU9JSg
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/dciyOVFgm8