< Back
சினிமா செய்திகள்
ஜவான் இசை வெளியீட்டு விழா: வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்
சினிமா செய்திகள்

ஜவான் இசை வெளியீட்டு விழா: வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்

தினத்தந்தி
|
30 Aug 2023 11:30 PM IST

வீடியோ மூலம் கமல்ஹாசன் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



சென்னை,

பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் ஜவான். இயக்குனர் அட்லி இயக்கி இருக்கும் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 7-ம் தேதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.


ஜவான் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. மாறாக வீடியோ மூலம் தோன்றி படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்