< Back
சினிமா செய்திகள்
அப்பா ஆக போகும் இயக்குனர் அட்லீ
சினிமா செய்திகள்

அப்பா ஆக போகும் இயக்குனர் அட்லீ

தினத்தந்தி
|
17 Dec 2022 6:18 AM IST

இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கிறார்.

சென்னை,

தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் அட்லீ கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருக்கிறார்.

இதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் அட்லீ இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மகிழ்ச்சியை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரப்போவதாகவும், அந்த தருணத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அட்லீ-பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்