< Back
சினிமா செய்திகள்
ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ஜரகண்டி பாடல் வெளியானது

image courtecy:twitter@shankarshanmugh

சினிமா செய்திகள்

ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியானது

தினத்தந்தி
|
27 March 2024 3:55 AM GMT

'ஜரகண்டி' பாடல் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.

அதன்படி, ஜரகண்டி பாடல் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 'ஜரகண்டி' பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்