< Back
சினிமா செய்திகள்
ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்திய ஜப்பான் ரசிகைகள்
சினிமா செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்திய ஜப்பான் ரசிகைகள்

தினத்தந்தி
|
25 Oct 2022 11:12 AM IST

ஜப்பானில் பெண் ரசிகர்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் செல்பி புகைப்படம் எடுத்து கலந்துரையாடி மகிழ்ந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் இந்த திரைப்படம் வசூலை குவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது. அதற்காக ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட திரைப்பட குழுவினரும் ஜப்பான் சென்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ பார்த்த ஜப்பான் ரசிகர்கள் அவருக்கும், ராம்சரணுக்கும் ராயல் சல்யூட் அடித்தனர். பின்னர் அவர்கள் இருவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டினர். குறிப்பாக பெண் ரசிகர்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் செல்பி புகைப்படம் எடுத்து கலந்துரையாடி மகிழ்ந்தனர். சிலர் ஆனந்த கண்ணீர் சிந்தினர். அவர்களைப் பார்த்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் நெகிழ்ந்து போனார். தற்போது இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்