அழகின் ரகசியம் சொன்ன ஜான்வி
|மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது அழகு ரகசியம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று சொல்லி இருமொழிகளிலும் வாய்ப்பு தேடுகிறார். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தனது அழகு ரகசியம் பற்றி ஜான்வி கபூர் அளித்துள்ள பேட்டியில், ''எனது அழகு ரகசியம் யோகா மற்றும் உடற்பயிற்சி. வேலையில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவறாமல் ஜிம்முக்கு செல்வேன். உடல், மனம் இரண்டையும் ஒருமைப்படுத்த முடிந்தால் வாழ்க்கையில் நேர்மறை எண்ணங்களோடு முன்னேறலாம்.
எனது பார்வையில் உடற்பயிற்சி என்றால் ஜிம்முக்கு செல்வது மட்டும் இல்லை. பல வழிகளில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எடை தூக்குவது, கார்டியோ, நீச்சல், யோகா போன்றவற்றை செய்கிறேன். உடற்பயிற்சியோடு யோகா செய்வது நல்ல பலனை கொடுக்கும். அழகையும் தரும். எனது சினிமா வாழ்க்கை சம்பந்தமான ஏற்றத்தாழ்வுகள், கஷ்ட நஷ்டங்களை எதிர்கொண்டு மகிழ்ச்சியாக முன்னேற யோகாவும் உடற்பயிற்சியும்தான் காரணம்'' என்றார்.