மகாபாரத கதை: சூர்யாவுடன் இணையும் ஜான்வி கபூர்
|முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் 'கர்ணா' படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்து புராணங்களிலிருந்து வரும் மகாபாரத கதாபாத்திரமான கர்ணனை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு கொரட்டாலா சிவா இயக்கிய ஜூனியர் என்டிஆர் படமான தேவாரா மூலம் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் . இப்படத்தில் தங்கம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜான்வி நடித்துள்ளார்.
முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தெற்கில் எப்போது நடிப்பார் என்ற தென்னக ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை, தனது அடுத்தடுத்த படங்களின் வழியாக தற்போது அவர் தீர்த்து வருகிறார்.