< Back
சினிமா செய்திகள்
Janhvi Kapoor speaks Tamil fluently
சினிமா செய்திகள்

'அம்மா மீது நீங்க காட்டிய அன்புதான்...' - தமிழில் பேசிய ஜான்விகபூர்

தினத்தந்தி
|
18 Sept 2024 11:14 AM IST

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் 'தேவரா' படக்குழு கலந்துகொண்டது.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு கலந்துகொண்டது. இதில், ஜூனியர் என்.டி.ஆர், ஜான்விகபூர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது ஜான்வி கபூர், 'இன்று நானும் என் குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கு நீங்கள் என் அம்மா(ஸ்ரீதேவி) மீது காட்டிய அன்புதான் காரணம். அதற்கு எப்பொழுதுமே நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். என் அம்மாவுக்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்,' என்று தமிழில் பேசினார் மேலும், விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்