வீட்டை ரூ.44 கோடிக்கு பிரபல நடிகரிடம் விற்ற ஜான்வி கபூர்
|இந்தி நடிகை ஜான்வி கபூர் தனது வீட்டை நடிகர் ஒருவருக்கு ரூ.44 கோடிக்கு விற்றுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நயன்தாரா நடிப்பில் வந்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கான குட்லக் ஜெர்ரி படத்திலும் நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். ஜான்வி கபூர் 2020-ம் ஆண்டு மும்பை ஜுகு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 14, 15 மற்றும் 16-வது தளங்களில் உள்ள சொகுசு வீடுகளை ரூ.39 கோடிக்கு விலைக்கு வாங்கினார். 3 ஆயிரத்து 456 சதுர அடி கொண்ட இந்த வீடுகளுக்கு 6 கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த வீடுகளை இந்தி நடிகர் ராஜ்குமார் ராவுக்கு ஜான்வி கபூர் தற்போது ரூ.43 கோடியே 87 லட்சத்துக்கு விற்று இருக்கிறார். இந்த வீட்டின் பத்திரப்பதிவுக்கு ரூ.2.19 கோடி செலுத்தி உள்ளனர். ராஜ்குமார் விரைவில், ஜான்வி கபூருடன் பீட், மோனிகா. ஓ மை டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்தி நடிகர் ரன்வீர் சிங் மும்பை பாந்த்ரா பகுதியில் ஷாருக்கான் வீட்டின் அருகில் ரூ.119 கோடிக்கு புதிய வீட்டை விலைக்கு வாங்கி குடியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.