< Back
சினிமா செய்திகள்
முன்னாள் முதல்-மந்திரி பேரனுடன் ஜான்வி கபூர் காதலா?
சினிமா செய்திகள்

முன்னாள் முதல்-மந்திரி பேரனுடன் ஜான்வி கபூர் காதலா?

தினத்தந்தி
|
20 Dec 2022 8:27 AM IST

ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன.

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி இந்தி பட உலகிலும் வெற்றி கொடி நாட்டினார். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார்.

இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கும் சென்று வந்து இருக்கிறார்கள். காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது.

மேலும் செய்திகள்