'அம்மாவின் மறைவுக்கு பிறகுதான் நான்...'- உணர்ச்சிவசப்பட்ட நடிகை ஜான்வி கபூர்
|அம்மாவின் மறைவுக்கு பிறகுதான் நான் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கைக்கொண்டேன் என்று ஜான்வி கபூர் கூறினார்.
மும்பை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தேவரா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார். இவர் ஆன்மிகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர். அதனால் அடிக்கடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.
இந்த நிலையில், தனது ஆன்மிக பயணம் எப்போது ஆரம்பமானது என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
வெள்ளிக்கிழமை முடி வெட்டக்கூடாது, கருப்பு உடை அணியக்கூடாது என்பது போன்ற நம்பிக்கைகளை ஒருபோதும் நான் நம்பியதில்லை. என் அம்மா உயிரோடு இருந்தபோது இந்த நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றினோம், ஏனென்றால் அம்மா இதனை செய்தார்கள். என் அம்மாவின் மறைவுக்கு பிறகுதான் நான் அதன் மீது நம்பிக்கைக்கொண்டேன். என் அம்மா இருந்தபோது நான் இவ்வளவு ஆன்மிக நாட்டம் கொண்டவளா? என்பது எனக்குத் தெரியாது.
ஒவ்வொரு வருடமும் என் அம்மாவின் பிறந்தநாளில் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தேன். முதல் முறை அவ்வாறு செய்தபோது, நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், ஆனால் எனக்கு அது மிகுந்த மன அமைதியையும் கொடுத்தது. இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.