< Back
சினிமா செய்திகள்
தென்னிந்திய திரையுலகில்  அறிமுகமாவது  பற்றி மனம் திறந்த  நடிகை ஜான்வி கபூர்
சினிமா செய்திகள்

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாவது பற்றி மனம் திறந்த நடிகை ஜான்வி கபூர்

தினத்தந்தி
|
23 Feb 2024 7:29 PM IST

நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி- போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்து நடித்து வருகிறார்.இவரது படங்கள் பல வெளியாகி உள்ளன. ஒவ்வொரு படத்துக்குப் பிறகும் அவரது நடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.

தற்போது தென்னிந்தியத் துறைக்கு ஜான்வி கபூர் திரும்பி உள்ளார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகுகிறது.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தேவாரா படம் பற்றி கூறியதாவது:-

ஒரு மிகப்பெரிய படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இந்த படத்தின் மூலம் நான் எனது வேர்களை நெருங்கியிருக்கிறேன். மேலும் இப்போது தெலுங்கு மொழியையும் நான் கற்று வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் சினிமா மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரர்களில் எனக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த வீரர்கள் ஆவார்கள் என்றார்.

பாலிவுட்டின் இளம் நடிகை ஜான்வி கபூர் தனக்கு பிடித்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை தெரிவித்து உள்ளது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஶ்ரீதேவி போல ஜான்வியும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருப்பதன் மூலம், வாழ்க்கை ஒரு முழு வட்டம் என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும் ஒரு சிறப்பான நடிகை ஸ்ரீதேவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடிகை ஜான்வி கபூர், நடிகர் ஜூனியர் என்டிஆருடன் அறிமுகமாகிறார்.

மேலும் செய்திகள்