< Back
சினிமா செய்திகள்
நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சினிமா செய்திகள்

நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தினத்தந்தி
|
21 July 2024 11:44 AM IST

நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

டைரக்டர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகை ஆவர்.

இதனிடையே, மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் தனது காதலன் ஷிகர் உடன் பங்கேற்றார்.

அதேவேளை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஜான்வி கபூருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கடந்த 18ம் தேதி ஜான்வி கபூர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. புட் பாய்சன் காரணமாக ஜான்வி கபூருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜான்வி கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜான்வி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்