< Back
சினிமா செய்திகள்
ஜெயிலர் பட டிரெய்லர் இன்று வெளியீடு..!

Image Courtesy:Twitter@sunpictures

சினிமா செய்திகள்

'ஜெயிலர்' பட டிரெய்லர் இன்று வெளியீடு..!

தினத்தந்தி
|
2 Aug 2023 12:35 PM IST

'ஜெயிலர்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான "ஹுக்கும்" எனப்பெயரிடப்பட்ட பாடல் வெளியானது.மூன்றாவது பாடலான "ஜுஜுபி" பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்