இணையத்தில் கசிந்த ரஜினி படக்காட்சி
|தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படக்காட்சியும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
புதிய படங்களின் படப்பிடிப்புகளில் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணைய தளத்தில் கசியவிடும் போக்கு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வலைதளத்தில் வெளியாகி படக்குழுவினரை சங்கடப்படுத்தியது. விஜய்யின் சண்டை காட்சிகள் மற்றும் விஜய், கதாநாயகி ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பாடல் காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இதனால் வாரிசு படப்பிடிப்பை வெளியாட்கள் நெருங்காத வகையில் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படக்காட்சியும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பை சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கினர். பின்னர் எண்ணூரில் படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சியை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.