< Back
சினிமா செய்திகள்
தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா; புகைப்படங்கள் வைரல்...!
சினிமா செய்திகள்

தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா; புகைப்படங்கள் வைரல்...!

தினத்தந்தி
|
30 July 2023 1:51 PM IST

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

சென்னை,

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வருகிற 10-ந்தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்த படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது.

இந்த நிலையில், நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்களை பதிவிட்ட புதிய புகைப்படங்கள் 19 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது.

காவாலா பாடல் யூடியூபில் 8.4 கோடி (84 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் தமன்னாவின் நடனமும் அனிருத்தின் இசையே என ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்