2 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஜெய்பீம்'.. படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்...!
|'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், 94-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம்பிடித்தது.
சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படம், ஒரு சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கியது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கேற்ப படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனிடையே நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது. 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் படம் உருவான விதம், படப்பிடிப்பின் போது நடைபெற்ற நிகழ்வுகள், பணியாற்றிவர்களுக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்து அவர்கள் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.