< Back
சினிமா செய்திகள்
ஆதிபுருஷ் படத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம் பாடல் வெளியீடு
சினிமா செய்திகள்

'ஆதிபுருஷ்' படத்தில் இருந்து 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
22 April 2023 10:32 PM IST

‘ஆதிபுருஷ்’ படத்தில் இருந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

'ஆதிபுருஷ்' டீசரில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலின் சிறு பகுதி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தில் இருந்து 'ஜெய் ஸ்ரீராம்' என்ற பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


மேலும் செய்திகள்