< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
|24 March 2023 10:13 PM IST
ஜெய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் ஜெய் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'காபி வித் காதல்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் ஜெய் தற்போது இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவாடா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'தீராக்காதல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.