< Back
சினிமா செய்திகள்
புஷ்பா-3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் - ஜெகபதி பாபு பேட்டி
சினிமா செய்திகள்

புஷ்பா-3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் - ஜெகபதி பாபு பேட்டி

தினத்தந்தி
|
8 April 2024 1:59 PM IST

புஷ்பா 2 படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் புஷ்பா தி ரூல். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றது. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா தி ரைஸ் (புஷ்பா 2) என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11.07 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனைத்தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகத்தையும் எதிர்பார்க்கலாம் என்று முன்னதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஜெகபதி பாபு பேட்டி ஒன்றில் கூறுகையில், புஷ்பா-3 படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க உள்ளேன். புஷ்பா-2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மிகவும் சுவாரஷ்யமான பாத்திரத்தில் நடிக்க உள்ளேன். புஷ்பா-3 படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு கூறினார்.

இவர் முன்னதாக மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்