< Back
சினிமா செய்திகள்
பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் ஜாக்கி ஷெராப்
சினிமா செய்திகள்

'பேபி ஜான்' படத்தில் கேமியோ ரோலில் 'ஜாக்கி ஷெராப்'

தினத்தந்தி
|
12 Oct 2024 9:12 AM IST

விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் இந்தி ரீமேக் படம் 'பேபி ஜான்'.

மும்பை,

பிரபல இயக்குனர் அட்லீ. இவர் 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து "பேபி ஜான்" என்ற படத்தை தயாரித்துள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் போஸ்டரை தயாரிப்பாளர் பிரியாஅட்லி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்