செல்பி எடுத்தவர் தலையில் அடித்த பிகில் பட வில்லன்
|விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்' படத்தில் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்து இருந்தார்.
சென்னை,
பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். ஜாக்கி ஷெராப் ரசிகரை தலையில் அடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
மும்பையில் ஒரு வணிக வளாகத்துக்குள் சென்ற ஜாக்கி ஷெராப்பை ரசிகர்கள் சூழ்ந்தனர். ஒரு ரசிகர் ஜாக்கி ஷெராப் அருகில் நின்று செல்பி எடுத்தார். அந்த ரசிகரின் பின்னந்தலையில் ஜாக்கி ஷெராப் அடித்து தள்ளி விட்டார்.
இந்த வீடியோ வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வீடியோவை பார்த்தவர்கள் செல்பி எடுக்க விருப்பம் இல்லை என்றால் மறுப்பு சொல்லி இருக்கலாம். அதை விடுத்து ரசிகரின் தலையில் எப்படி அடிக்கலாம். அந்த ரசிகர் திருப்பி அடித்து இருந்தால் உங்கள் நிலைமை என்னவாகி இருக்கும் என்றெல்லாம் ஜாக்கி ஷெராப்பை கண்டித்து வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.
இன்னும் சிலர் ரசிகரை செல்லமாக தட்டி இருக்கலாம் என்று சொல்லி ஜாக்கி ஷெராப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜாக்கி ஷெராப் நடிப்பில் சமீபத்தில் 'மஸ்த் மெய்ன் ரெஹ்னே கா' என்ற படம் வெளியானது.