< Back
சினிமா செய்திகள்
எனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள் - ஜாக்கி ஷெராப்
சினிமா செய்திகள்

எனது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள் - ஜாக்கி ஷெராப்

தினத்தந்தி
|
14 May 2024 6:32 PM IST

எனது படங்கள், குரல், பெயர் என எதையும் என் அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தக் கூடாது என நடிகர் ஜாக்கி ஷெராப் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் தமிழிலும் 'ஆரண்ய காண்டம்', 'பிகில்', 'ஜெயிலர்' உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது பெயர், படங்கள், குரல் என எதையும் தன்னுடைய அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தக் கூடாது என டெல்லி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதாவது தனது பெயர், புகைப்படங்கள், குரல் மற்றும் அவரது அனுமதியின்றி 'பிடு' என்ற அவரது புனைப்பெயரையும் பல்வேறு நிறுவனங்கள் முறையில்லாமல் பயன்படுத்தி வருவதாக அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

பாலிவுட் நடிகர் ஒருவர் தங்களின் ஆளுமை உரிமைகளை பாதுகாக்க அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு நடிகர் அனில் கபூரும் தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கில் வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்