'90ஸ் கிட்ஸ்களின் நாயகன்' ஜாக்கி சானுக்கும் வயது ஆகிவிட்டது - வைரல் புகைப்படம்
|நடிகர் ஜாக்கி சானின் சமீபத்திய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பீஜிங்,
'90ஸ் கிட்ஸ்களின் நாயகான திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவரின் தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதனிடையே, நடிகர் ஜாக்கி சான் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துவிட்டார். ஜாக்கி சான் கடைசியாக நடித்து 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரைட் ஆன். இந்த படத்திற்குபின் ஜாக்கி சான் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. 69 வயதாகும் ஜாக்கி சான் வரும் ஏப்ரல் மாதம் 70 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ஜாக்கி சானின் சமீபத்தில் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தலைமுடி நரைத்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி சான் பங்கேற்றது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து வரும் சிலர் '90ஸ் கிட்ஸ்களின் நாயகன்' ஜாக்கி சானுக்கும் வயது ஆகிவிட்டது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.