< Back
சினிமா செய்திகள்
முதல் நாளில் வசூல் சாதனை படைத்த ஜவான் திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா செய்திகள்

முதல் நாளில் வசூல் சாதனை படைத்த 'ஜவான்' திரைப்படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Sept 2023 8:07 PM IST

'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை,

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார். 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஜவான் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.129.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தி திரைத்துறையில் திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ.129.6 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை 'ஜவான்' படைத்துள்ளது.

இதனை இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்