கவர்ச்சியில் எல்லை மீறுவது தவறு - நடிகை கீர்த்தி ஷெட்டி
|வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான 'கஸ்டடி' மற்றும் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வந்த 'தி வாரியர்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கவர்ச்சி குறித்து கீர்த்தி ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் கிளாமராக காட்சி அளிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. கதாநாயகிகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் முக்கியம். ஆனால் கவர்ச்சி என்ற பெயரால் எல்லையை மீறக் கூடாது. 'ஸ்கின் ஷோ' தவறு அல்ல. அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். டெக்னாலஜி அதிகமானதால் எல்லாராலும் சுலபமாக படங்களை பார்க்க முடிகிறது. அப்படி இருக்கும்போது கதை விஷயத்தில் நிறைய ஜாக்கிரதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆபாசமான காட்சி இருந்தால் குடும்பத்தோடு பார்க்க மிகவும் நெருடலாக இருக்கும்.
எனது படங்களில் நான் உடை அணியும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் என்னை அவர்கள் வீட்டுப் பெண்போல பாவிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அல்லவா. இந்த விஷயத்தை நான் அடிக்கடி நினைவில் வைத்துக் கொள்வேன்'' என்றார்.