இது அதே தான்... உண்மையான சந்திரமுகிய பார்க்கப்போறீங்க - வெளியானது 'சந்திரமுகி 2' டிரைலர்..!
|ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, ரவி மரியா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ந்தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'சந்திரமுகி 2' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள், போர் காட்சிகள் என்று பிரமாண்டமான காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.