< Back
சினிமா செய்திகள்
முத்தத்தை திரையில் காட்டுவது தவறல்ல... ரசிகர்களை ஏமாற்ற முடியாது - நடிகர் நானி
சினிமா செய்திகள்

'முத்தத்தை திரையில் காட்டுவது தவறல்ல... ரசிகர்களை ஏமாற்ற முடியாது' - நடிகர் நானி

தினத்தந்தி
|
27 Nov 2023 7:54 AM IST

நானி நடித்துள்ள 'ஹாய் நான்னா' திரைப்படம் வருகிற டிசம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்துக்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி சமீபத்திய பேட்டியில் படம் குறித்து நானி கூறும்போது, "ஹாய் நான்னா அழகான படம். இதில் நடித்தது பெருமை. இந்த படத்தில் காதல் உணர்வுப்பூர்வமாக இருக்கும். ஆண், பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும். எனது படங்களில் கதைகளுக்கே முக்கியத்துவம் தருகிறேன்.

முன்பெல்லாம் முத்த காட்சியில் திரை இருட்டாகி விடும். ஆனால் இது 2023ம் ஆண்டு, இப்போது முத்தம் பெரிய விஷயம் இல்லை. முன்பு மாதிரி மரத்தை சுற்றுவது, பூவை காட்டுவது என்று இப்போது பார்வையாளர்களை ஏமாற்ற முடியாது. முத்தத்தை திரையில் காட்டுவது தவறல்ல.

நான் மணிரத்னம், கமல்ஹாசனின் தீவிர ரசிகன். சிறந்த தமிழ் இயக்குனர் ஒருவர் எனக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். விரைவில் நான் நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளேன். அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என்றார்.

மேலும் செய்திகள்