< Back
சினிமா செய்திகள்
அது ஒரு பிராங்க்... வைரல் வீடியோ குறித்து நடிகர் விஷால் விளக்கம்
சினிமா செய்திகள்

அது ஒரு பிராங்க்... வைரல் வீடியோ குறித்து நடிகர் விஷால் விளக்கம்

தினத்தந்தி
|
28 Dec 2023 7:27 AM IST

வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பினர்.

நடிகர் விஷால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்ததும் விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் இது பட புரொமோஷன் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். ஆம் நான் நியூயார்க்கில் இருக்கிறேன். இது எனது உறவினர்களுடன் நான் வழக்கமாக தங்கும் இடமாகும். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் மன அமைதிக்காக இங்கு வருவது வழக்கம். இதனை ஒரு சடங்காகவே பின்பற்றி வருகிறேன்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னுடைய உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது. என்னுள் எப்போதும் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளிக்கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால்தான் அப்படி செய்தேன். அத்துடன் உங்களின் அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். சிலர் இதை காரணமாக வைத்து என்னை குறிவைத்தனர். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லவ் யூ ஆல்!" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்