< Back
சினிமா செய்திகள்
படம் எடுத்து ரிலீஸ் செய்வது கஷ்டம் - இயக்குநர் பா.ரஞ்சித்
சினிமா செய்திகள்

படம் எடுத்து ரிலீஸ் செய்வது கஷ்டம் - இயக்குநர் பா.ரஞ்சித்

தினத்தந்தி
|
16 March 2024 8:07 AM IST

நான் எடுத்த ‘அட்ட கத்தி' படத்திலும் நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது.

சென்னை,

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மதுமிதா பைஜூ ஆகியோர் 'ரெபெல்' படத்தில் நடித்துள்ளனர். பட நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, "தற்போது படங்கள் எடுத்து ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது.

சிறிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர முடியாமல் பல தயாரிப்பாளர்கள் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நான் வெளியிட்ட ஜே.பேபி படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதா என்பது சந்தேகம்தான்.

படத்தை பார்த்தவர்கள் பாராட்டினார்கள். வணிக ரீதியான வெற்றியை விட மக்கள் விரும்பும் யதார்த்தமான படைப்பாக அது இருந்தது. நான் எடுத்த 'அட்ட கத்தி' படத்திலும் நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. தங்கலான் படத்தில் நானும், ஜி.வி.பிரகாசும் இணைந்துள்ளோம். ரெபெல், விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இருமொழி அரசியலை பேசும் என்று நினைக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கூடியவர்'' என்றார்.

மேலும் செய்திகள்