< Back
சினிமா செய்திகள்
விக்ரம் படத்தில் மீண்டும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தான்... லிசி சொல்கிறார்
சினிமா செய்திகள்

'விக்ரம்' படத்தில் மீண்டும் நடிக்க முடியாமல் போனது வருத்தம் தான்... லிசி சொல்கிறார்

தினத்தந்தி
|
20 May 2022 2:39 PM IST

1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக லிசி நடித்திருந்தார். தற்போது தயாராகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள புதிய படம், 'விக்ரம்'. இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் பாடல் சமீபத்தில் வெளியானது. பல ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் இந்தப் படத்தில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1986-ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக லிசி நடித்திருந்தார். தற்போ து தயாராகியுள்ள 'விக்ரம்' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்

தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ''பல ஆண்டுகளுக்குப் பிறகு கமல் சார் மீண்டும் `விக்ரம்' படத்தை தயாரிக்கிறார். ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட படைப்பு. முந்தைய 'விக்ரம்' படத்தில் நானும் ஒரு கதாநாயகி. இப்போதைய 'விக்ரம்' படத்தில், நான் நடிக்க முடியாமல் போனது ஏமாற்றம்தான். இருந்தாலும் எனது ஸ்டூடியோவில் இந்தப்படத்துக்கான குரல் பதிவு நடந்திருப்பது பெருமையாக இருக்கிறது. 'விக்ரம்' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்''.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தப் பதிவுடன் பழைய 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த படத்தையும், தற்போது கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படத்தையும் இணைத்து அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்