< Back
சினிமா செய்திகள்
யாஷிகா ஆனந்துடன் காதலா? நடிகர் ரிச்சர்ட் விளக்கம்
சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்துடன் காதலா? நடிகர் ரிச்சர்ட் விளக்கம்

தினத்தந்தி
|
8 Jun 2023 7:50 AM IST

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்தும், நடிகர் ரிஷி ரிச்சர்ட்டும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதன் மூலம் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.

ரிஷி ரிச்சர்ட் காதல் வைரஸ் படம் மூலம் கதாநாயனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரவுபதி, ருத்ர தாண்டவம் படங்களிலும் நடித்து இருந்தார். இவர் நடிகையும், அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினியின் சகோதரர் ஆவார்.

தன்னை விட 22 வயது குறைந்த யாஷிகா ஆனந்தை ரிஷி ரிச்சர்ட் காதலிக்கிறாரா என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ரிஷி ரிச்சர்ட் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நானும் யாஷிகா ஆனந்தும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எங்களுக்குள் காதல் இல்லை. நாங்கள் இருவரும் விஜய் பரத்வாஜ் இயக்கும் 'சில நொடிகளில்' என்ற படத்தில் நடித்து வருகிறோம். அந்த படத்தில் இருவரும் நடித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தேன். அதைவைத்து இருவருக்கும் காதல் என்று வதந்தி கிளப்பி உள்ளனர்'' என்றார்.

மேலும் செய்திகள்