< Back
சினிமா செய்திகள்
`கோட் படத்திற்கு விஜய்யின் சம்பளம் இவ்வளவு கோடியா?
சினிமா செய்திகள்

`கோட்' படத்திற்கு விஜய்யின் சம்பளம் இவ்வளவு கோடியா?

தினத்தந்தி
|
24 March 2024 9:29 AM IST

நடிகர் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2 படங்களுடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதன்படி, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக நடிகர் விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்தசூழலில், விஜய் இதுவரை 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நிலையில், தற்போது நடித்துவரும் 'கோட்' படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் கடைசி படத்தில் அவருக்கு 250 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்